May 17, 2010

அன்புடன் நட்பு…

அன்புடன் நட்பு…





எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு
*



என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்
*



காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு
*



காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு

பள்ளி நட்பு.


பிஞ்சு உடல் கொண்ட,
அழகிய இதயம் இரண்டில்
துளிர்த்ததே நட்பு.. *

May 14, 2010

PADHA SUVADUKAL

மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் செல்லாதீர்கள் …

உங்களின் பாத சுவடுகள்

தெரியாமல் போய்விடும் ......

நலம் விரும்பிகள்



தயவுசெய்து
பட்டாசு வெடிக்காதீர்கள்
தீக்காயம் ஏற்படலாம்

நாங்கள்
அணுகுண்டு போடுகிறோம்

அட பாவமே.......



அட பாவமே... ஒரு கையில் கன்(Gun)
மறுகையில் காதலா?
போடா போ
எதை நீ தெரிந்தாலும்
காயம் உனக்குத்தான். :-(

May 7, 2010


தோழி

அன்பு தோழியே!

காலங்கள் மாறலாம்......

கடல் கடந்தும் வாழலாம்...

கருத்துக்கள் மாறுபடலாம்,...

ஆனால் மாறாதது

நட்பு மட்டும்...

இது நமக்கு மட்டும்மல்ல...
என் தோழி . . .


May 5, 2010

பிரிவு கவிதை ! . . .

பிரிவுகள்தான்
அன்பின் ஆழத்தை
அளக்கும் கருவியாமே…?

பார்த்தாயா
சின்னப் பிரிவிற்குள்
நீ சிதைந்து போனதை…?

இது
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் சேர்த்துத்தான்
சொல்கின்றேன்.

ம்…
இப்போது புரிகிறதா
என்மீது நீ கொண்ட நேசமும்
உன்மீது நான் கொண்ட நேசமும்
எவ்வளவு ஆழமானதென்று…?

NETல் சுட்டது . . .

எதிரிகள்

பொது இடத்தில்
சிகரெட் பிடிப்பவர்கள் . . .

எச்சில் துப்புவர்கள் . . .

பேசுகிறேன் பேர்வழி
என்று சொல்லி
ரம்பம் போடுபவர்கள் . . .

தான் பேசுவது
ஊருக்கே கேட்பது
போல்
பேசுபவர்கள் . . .

Helmet போடாமல் வண்டி ஓட்டுபவர்கள் . . .

தண்ணி அடிச்சிட்டு

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . .

மனைவியை அடிப்பவர்கள் . . .

தோழி/நண்பன் என்ற பேரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ———————–

அவ்ளோ தான் ;)